Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரக்ஞானந்தாவுக்கு விலையுயர்ந்த எலக்ட்ரி கார் பரிசு.. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு..!

Advertiesment
pragnanandha
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:00 IST)
விரைவில் செஸ் வீரர்கள் பிரக்ஞானந்தாவுக்கு விலை உயர்ந்த எலக்ட்ரிக் கார் பரிசளிக்கப்படும் என ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நடந்த உலக கோப்பை செஸ் போட்டியில் டைப்ரைக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா இரண்டாவது இடம் பெற்றார். அவருக்கு  இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையில் தற்போது பரிசை மழையும் குவிந்து வருகிறது.  
 
உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக அளிக்க விரும்புவதாக ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  பிரக்ஞானந்தாவுக்கு பலரும்  தார் காரை பரிசளிக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டனர் 
 
ஆனால் என்னிடம் இன்னொரு யோசனை உள்ளது.  அவருக்கு விலை உயர்ந்த xuv400 என்ற எலக்ட்ரிக் காரை பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் 
 
விரைவில் பிரக்ஞானந்தா பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு இந்த காரை வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சில தொழிலதிபர்களும் பல்வேறு பரிசுகளை பிரக்ஞானந்தாவுக்கு வழங்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தை கொலை செய்ய திட்டமிட்ட பிளஸ் 1 மாணவி.. அதிர்ச்சி தகவல்..!