Publish Date: Fri, 08 Feb 2019 (13:25 IST)
Updated Date: Fri, 08 Feb 2019 (13:27 IST)
மும்பையில் 70 வயது முதியவர் ஒருவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை குர்கான் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். சிறுமியின் தாயார் வேலையில் இருப்பதால் வெளியூரில் வசித்து வந்தார்.
அந்த சிறுமியின் தந்தைக்கு பக்கத்து ஃப்ளாட்டில் வசித்து வந்த 70 வயது முதியவருடன் நட்பு இருந்துள்ளது. இருவரும் சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அப்படி சமீபத்தில் இருவரும் ஒன்றாய் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறி சிறுமியின் தந்தை தூங்கிவிட்டார். இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்ட 70 வயது முதியவர் அந்த சிறுமியை சீரழித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் போன் செய்து தெர்விக்கவே, ஆட்டம் கண்டுபோன அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் அந்த முதியவரை கைது செய்தனர். கூடா நட்பு கேடாய் விளையும் என்பார்கள். தந்தையின் கேடுகெட்ட நட்பால் சிறுமியின் வாழ்க்கை சீரழிந்து போன சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.