Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏர்போர்டில் அனுமதியின்றி தரையிறங்கிய விமானம்…பயணிகள் அதிர்ச்சி

Advertiesment
Flight
, புதன், 24 மே 2023 (19:19 IST)
கடந்த திங்கட்கிழமை அன்று சண்டிகரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் நோக்கி  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்   ஒன்று புறப்பட்டது.

இரவு 8;45  மணிக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியதிருந்தது.

இந்த நிலையில் பயணிகள் தங்கள் இருக்கையில் இருந்தபடி  ஏர்போர்டில் இறங்க தயாராகினர்.

அந்த விமானம் தரையிறங்காமல் உடனே மேலே எழுந்து பறந்து சென்றது. என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி விமான பயணி ஒருவர் கூறியதாவதது: விமானம் தரையிறங்கிய உடன் , மீண்டும் மேலே பறந்து சுமார் 20 நிமிடங்கள் வானில் வட்டமிட்ட பிறகுதான் தரையிறங்கியது இதனால்  நாங்கள் பதற்றம் அடைந்தோம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், விமானம் தரையிறங்கியபோது, அங்கு ஒரு  நிலையற்ற சூழல் இருந்ததால் விமானம் பயந்து செல்லும்படி விமானிக்கு அறிவுறுத்தினோம் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 வது மாடியில் இருந்து கீழே குதித்து சிறுவன் தற்கொலை!