பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் கொள்கையை பரப்பி வரும் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாளத்திற்கு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத கொள்கையுடன் செயல்பட்டு வரும் “வாரிஸ் பஞ்சாப் டி” அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங். கடந்த சில காலமாக பொது அமைதியை குலைக்கும் வகையில் இந்த இயக்கம் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 18ம் தேதி முதல் இந்த இயக்கம் மீதும், அம்ரித்பால் சிங் மீதும் போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீஸார் முயற்சி செய்து வரும் நிலையில் ஆங்காங்கே இயக்க ஆதரவாளர்கள் உதவியுடன் அம்ரித்பால் சிங் தப்பி சென்று போலீஸ்க்கு தண்ணி காட்டி வருகிறார்.
இந்நிலையில் தற்போது அம்ரித்பால் சிங் நேபாளத்திற்கு சென்று பதுங்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அம்ரித்பால் சிங்கை பிடிக்க நேபாள அரசு உதவ வேண்டும் என இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட நேபாள அரசு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதேசமயம் இந்திய – நேபாள எல்லையிலும் பாதுகாப்பு சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக அம்ரித்பால் தப்பி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்டு எல்லையில் இருக்கும் வீரர்கள் உஷாராக இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.