Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜே.என்.யூ மாணவர் தாக்குதல்: அறிக்கை அளிக்க அமித்ஷா உத்தரவு!

Advertiesment
ஜே.என்.யூ மாணவர் தாக்குதல்: அறிக்கை அளிக்க அமித்ஷா உத்தரவு!
, திங்கள், 6 ஜனவரி 2020 (08:58 IST)
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டத்து குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்குமாறு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் பல பல்கலைகழக மாணவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு டெல்லி காவல்துறை ஆணையருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக தனித்துப் போட்டியிருக்கலாம் – பொன் ராதாகிருஷ்ணனின் கருத்தும் அதிமுக அமைச்சர்களின் எதிர்வினையும் !