Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜே.பி.நட்டாவுடன் அமித்ஷா அவசர ஆலோசனை.. ராஜ்நாத் சிங் விரைவு.. டெல்லியில் பரபரப்பு..!

Advertiesment
JB Nadda

Mahendran

, வியாழன், 6 ஜூன் 2024 (11:25 IST)
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அமித்ஷா அவசர ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும், டெல்லியில் நட்டா இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

நாளை மறுநாள் 3வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அமைச்சரவையில் யார் யாரை புதியதாக சேர்ப்பது, ஏற்கனவே அமைச்சர்களாக இருப்பவர்களில் யார் யாரை விலக்குவது என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அமித்ஷா மற்றும் ஜே பி நாட்டார் ஆகிய இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என்றும் அதில் சில முக்கிய விவரங்களை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதவி இல்லையா? ஆனாலும் தமிழருக்கு தான் நிதித்துறை..!