Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் வரவிருந்த அமித்ஷா திட்டம் ரத்து; ஜனவரிக்கு ஒத்திவைப்பு

Amitshah

Siva

, வியாழன், 26 டிசம்பர் 2024 (07:53 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 27ஆம்  தேதி தமிழக வர இருப்பதாகவும், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் பாஜகவின் வியூகம் குறித்து ஆலோசனை தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்றும், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை வருவதாகவும், அங்கு புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

அமித்ஷா வருகையின்போது பாஜக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை தர இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், பாதுகாப்பு கருதி, முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் இயக்க முடியாது என்று கூறப்பட்டதால் நாளை தமிழகம் வர இருந்த, அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது வருகை ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஜகஸ்தானில் நடந்த விமான விபத்து: 38 பேர் உயிரிழப்பு! 29 பேர் காயமின்றி உயிர் தப்பிய அதிசயம்..!