Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருத்ரதாண்டவமாடி கரையை கடந்தது அம்பன் புயல்: பெரும் சேதம் என தகவல்

Webdunia
புதன், 20 மே 2020 (18:26 IST)
ருத்ரதாண்டவமாடி கரையை கடந்தது அம்பன் புயல்
வங்க கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே அம்பன் புயல் கரையை கடந்தது 
 
இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று பேசியதாகவும் சுமார் 4 மணி நேரம் இந்த புயல் கரையை கடந்ததாகவும், கரையை கடக்கும்போது மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகளை சூறை ஆடி விட்டு இந்த அம்பன் புயல் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்த புயலால் மேற்கு வங்கத்திலும் வங்கதேச நாட்டிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சேதம் குறித்த விபரங்கள் தற்போது கணக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் புயல் கரையை கடந்த போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் வலுவிழந்த கட்டிடம் ஒன்று உதிர்ந்து விழுவது போலவும் அருகில் இருந்த கார்கள் பல்டி அடித்து சென்றது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணைக் குடியரசுத் தலைவர்! முன்னாள் நீதிபதியை களமிறக்கிய இந்தியா கூட்டணி!

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

திமுக எம்பி டி.ஆர்.பாலு மனைவி ரேணுகா தேவி காலமானார்.. தலைவர்கள் இரங்கல்..!

பைக் ஓட்டிக்கொண்டே ரீல்ஸ் எடுத்த 17 வயது சிறுவன்.. விபத்து ஏற்பட்டு பரிதாப பலி..!

எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்குள் புகுந்தது ஏன்? - ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments