தீபாவளி முதல் அமேசான் நிறுவனம் தனது உணவு டெலிவரி சேவையை தொடங்கவுள்ளது.
இந்தியாவின் பிரபல ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் நிறுவனம், பல நகரங்களில் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்துவரும் முக்கியமான நிறுவனம் ஆகும். இந்நிலையில் ஸ்விக்கி, சொமேட்டோ, போன்ற ஆன்லைன் உணவு நிறுவனங்களை போலவே அமேசானும் உணவு டெலிவரியில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் பெங்களூரு நகரில் துவங்கவுள்ளதாகவும், பின்பு மற்ற நகரங்களில் விரிவுப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமேசான் உணவு டெலிவரியில் இறங்கினால், ஏற்கனவே இங்கு சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் சொமேட்டோ, ஸ்விக்கி, ஊபர் போன்ற ஆன்லைன் உணவு நிறுவனங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ஊபர் ஈடஸ், சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் ஆர்டர் ஒன்றிற்கு 18% முதல் 25% வரை கமிஷனாக உணவகங்களிடமிருந்து வாங்குகின்றன. இந்நிலையில் அமேசான் நிறுவனம் கமிஷனாக 5% முதல் 10% வரை பெறலாம் எனவும் கூறப்படுகிறது.