ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தால் சோப்புக்கட்டி வருதே! அதிர்ச்சியை கொடுத்த அமேசான்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (22:00 IST)
ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் கொடுப்பது என்பது தற்போது அன்றாட வழக்கமாகிவிட்டது. சோப்பு, சீப்பு முதல் ஸ்மார்ட்போன்கள் வரை ஆன்லைனில் இகாமர்ஸ் இணையதளங்கள் மூலம் ஆர்டர் செய்து வருகின்றனர்



 
 
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த சிராஹ் தவான் என்பவர் ஒன்ப்ளஸ் மாடல் ஒன்றை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் கொடுத்துள்ளார். இரண்டே நாட்களில் பார்சலும் வந்தது. டெலிவரி கொடுத்த நபரிடம் பணத்தை கொடுத்துவிட்டு ஆசை ஆசையாய் பார்சலை பிரித்தார். ஆனால் உள்ளே இருந்ததோ ஸ்மார்ட்போனுக்கு பதில் சோப்புக்கட்டி
 
இதனால் அதிர்ச்சி அடைந்த தவான் உடனடியாக அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினார். ஆனால் அவர்கள் கம்ப்ளைண்ட் என்று ஒரு நம்பர் கொடுத்து அதில் கூறுமாறு சொன்னார்களாம். அதற்கு போன் செய்தால் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. உடனே கடுப்பான தவான் சோப்புக்கட்டியை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டார். இது நடந்து ஒருசில நிமிடங்களில் அமேசான் பெயர் இந்திய அளவில் டேமேஜ் ஆனது. உடனடியாக தவானுக்கு நீதியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடியல!. ஈரானுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை!.. டிரம்ப் விரக்தி!...

மேடையில் பேசி கொண்டிருந்தபோது ஆத்திரத்தில் திடீரென மேடையில் இருந்து வெளியேறிய மம்தா பானர்ஜி..!

Nothing அறிமுகம் செய்யும் புதிய AI வசதி.. நாம் பேசுவதை உரையாக மாற்றி தரும்..!

ஐபோன் 18 அறிமுகமாவது ஒரு பக்கம் இருக்கட்டும்.. எல்லோரின் கண்ணும் ஐபோன் 20ல் தான் உள்ளது..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு!..

அடுத்த கட்டுரையில்
Show comments