Publish Date: Thu, 28 Apr 2022 (09:21 IST)
Updated Date: Thu, 28 Apr 2022 (09:25 IST)
அமர்நாத் யாத்திரைக்குச் செல்ல முன்பதிவு கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அமர்நாத் யாத்திரை செல்வதற்கான முன்பதிவு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய நிலையில் கடந்த 17 நாட்களில் 20 ஆயிரத்து 600 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் இன்னும் அதிகமான அளவு முன்பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமர்நாத் யாத்திரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை அமர்நாத் யாத்திரை செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது