Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடு முழுவதும் ரயில்கள் அனைத்தும் ஆக.12 ஆம் தேதி வரை ரத்து

நாடு முழுவதும் ரயில்கள் அனைத்தும் ஆக.12 ஆம் தேதி வரை  ரத்து
, வியாழன், 25 ஜூன் 2020 (21:03 IST)
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க அரசு துரிதமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தற்போது, இந்தியா முழுவதும் நகரங்களில் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்ற  மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், இந்தியா முழுவதும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் ஆகியவற்றின் சேவைகளும் வரும்  ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி வரை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜூலை 1 முதல் ஆக.12 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து டிக்கெட்டுகளும் ரத்துசெய்யப்படுவதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வு ஒத்தி வைப்பு: செப்டம்பர் இறுதியில் நடத்த திட்டம்