Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

Siva
செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (13:17 IST)
ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காம் என்ற பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இதனை அடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து 48 சுற்றுலா தளங்களை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ’மக்களோடு மக்களாக வாழ்ந்து பயங்கரவாதிகள் கலந்து சதித்திட்டங்களில் ஈடுபட வாய்ப்பு’ இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், பயங்கரவாதிகளால் பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் பகுதிகள் கண்டறிந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்த முடிவு செய்திருப்பதாகவும், ரயில் நிலையம் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்த  திட்டமிடப்பட்டுள்ளதால், ரயில்வே ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கேஸ் குடுக்க வந்திருக்கேன்..! போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்த சிறுத்தை! - வைரலாகும் நீலகிரி சிசிடிவி வீடியோ!

திருமாவளவனுக்கு நாட்டு பற்றே கிடையாது.. இந்த தேச விரோதிகளால் நாட்டுக்கு ஆபத்து! - எச்.ராஜா ஆவேசம்!

டீசல் செலவு அதிகரிப்பு எதிரொலி: 1000 பேருந்துகள் கேஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றம்..!

காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் நீக்கம்; முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

மேலே பாம்பு.. கீழே நரி..! மத்திய அரசு, ஆளுநரை தாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments