அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய கோரிக்கை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது வங்கிகளுக்கு இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனி மற்றும் விடுமுறையாக உள்ளது. இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் கோரிக்கை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.