5ஜி ஏலத்தில் பங்கேற்கப்போவதில்லை என ஏர்டெல் நிறுவன கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.35,500 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாமல் சிக்கலான சூழ்நிலையில் ஏர்டெல் இருந்து வரும் நிலையில், தற்போது 5ஜி ஏலத்தில் பங்கேற்கப்போவதில்லை என ஏர்டெல் நிறுவன கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
ஆம், 5ஜி சேவைக்காக 3.5 ஜிகாஹெர்ட்ஸ் அலை வரிசையில், 100 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்திற்கு ரூ.50,000 கோடி விலையை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரை செய்துள்ளது. இதனால் ஏர்டெல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது ஏர்டெல்.
இது குறித்து ஏர்டெல் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்ததாவது, 5ஜி சேவைகளை வழங்குவதற்கு இது அவசியம் எனும் நிலையில், 100 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்திற்கு ரூ.50,000 கோடி என்பது மிக அதிகம், இது கட்டுபடியாக கூடிய விலையும் அல்ல. இதே விலை நிர்ணயிக்கப்பட்டால் ஏர்டெல் ஏலத்தில் பங்கேற்காது என தெரிவித்துள்ளார்.