இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது குறைந்த பட்ச ரீசார்ஜ் ப்ளான் 249 ரூபாய் ப்ளானை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் புழக்கத்தில் உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் 4ஜி, 5ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் ஜியோ, ஏர்டெல் நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்தி வரும் நிலையில், ஏர்டெல்லில் குறைந்த பட்ச ப்ளானாக 249 ரூபாய் ரீசார்ஜ் ப்ளான் இருந்து வந்தது.
இந்த ப்ளானில் 24 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வசதியை பெற முடியும். பெரும்பாலான ஏர்டெல் பயனாளர்களின் முதல் தேர்வாக இருந்த இந்த குறைந்த ரீசார்ஜ் ப்ளானை தற்போது முற்றிலுமாக நீக்குவதாக அறிவித்துள்ளது ஏர்டெல். இதனால் பயனாளர்கள் ஏர்டெல்லின் பிற விலை உயர்ந்த ரீசார்ஜ் ப்ளான்களை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜியோவிலும் இதே போல இருந்த குறைந்த விலை ரீசார்ஜ் ப்ளான் முன்னதாக நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏர்டெல்லும் அதையே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K