Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிதாக 200 விமானங்களை வாங்க உள்ள ஏர் இந்தியா!

Advertiesment
புதிதாக 200 விமானங்களை வாங்க உள்ள ஏர் இந்தியா!
, திங்கள், 20 ஜூன் 2022 (14:44 IST)
ஏர் இந்தியா புதிதாக 200 விமானங்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியது என்பதும் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக டாடா நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என்பதும் தெரிந்ததே. தற்போது உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்டு வருவதற்கும் ஏர் இந்தியா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. 
 
ஏர் இந்தியா புதிதாக 200 விமானங்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்காக போயிங், ஏர் பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளாக புதிதாக ஒரு விமானம் கூட வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை - எங்கெங்கு தெரியுமா?