ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

Mahendran
புதன், 22 அக்டோபர் 2025 (16:01 IST)
குரு கிராம் செக்டார் 30 பகுதியில் உள்ள கெளரவ் விருந்தினர் விடுதி ஒன்றில், ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பாதுகாப்புத் தணிக்கையாளரான, மும்பையை சேர்ந்த பிரஃபுல் சாவந்த் என்பவர் தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
 
நேற்று காலை உணவு முடித்து அறைக்கு திரும்பிய சாவந்த், மதிய உணவுக்கான பணத்தை UPI மூலம் அனுப்பியுள்ளார். ஆனால், மதிய உணவுக்கு அழைக்கையில் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. அறை உள்ளே பூட்டப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் கட்டிலில் சடலமாக கிடந்தார்.
 
உயிரிழந்த சாவந்த் காலையில் சாதாரணமாகவே காணப்பட்டதாகவும், தற்கொலை குறிப்பு எதுவும் அறையில் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது மரணத்திற்கான மர்மம் நீடிப்பதால், சிசிடிவி காட்சிகள் மற்றும் விடுதி ஊழியர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

கூட்டணியிலேயே ஒற்றுமை இல்லை?': பீகாரை எப்படி ஒற்றுமையாக வழிநடத்த முடியும்? சிராக் பாஸ்வான்!

புயல் உருவாக வாய்ப்பில்லை! கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு? - இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

215 முகாம்களில் 1.45 லட்சம் பேருக்கு உணவு! மழை தொடங்கும்போதே சென்னை நிலைமை இப்படியா?

பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; அவரது தொண்டர்களுக்கு கஷ்டம்: நடிகை கஸ்தூரி

அடுத்த கட்டுரையில்
Show comments