8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

Siva
வியாழன், 12 ஜூன் 2025 (17:44 IST)
லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மதியம் 1:39 மணிக்கு புறப்பட்டு, 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானது.
 
இந்த விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் துணை விமானி கிளைவ் குந்தர் ஓட்டியுள்ளனர். இருவரும் சேர்த்து 9,300 மணிநேர பறக்கும் அனுபவம் கொண்டவர்கள் என சிவில் விமானப் பாதுகாப்புத் துறை  தெரிவித்துள்ளது. இதில் கேப்டன் சபர்வாலுக்கு மட்டும் 8,200 மணிநேர பறக்கும் அனுபவம் இருக்கிறது; அவரின் துணை விமானிக்கு 1,100 மணிநேர அனுபவம் உள்ளது.
 
விமானம் 625 அடி உயரத்திலிருந்து நிமிடத்துக்கு 475 அடி வேகத்தில் கீழே விழுந்தது. அதாவது, விபத்துக்குள்ளாகும் முன்னர், விமானிகளுக்கு எதிர்வினை செய்ய ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே நேரம் கிடைத்தது.
 
விமானத்திலிருந்து "மேடே" எனும் அவசர உதவி அழைப்பு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்தது. ஆனால், அந்த அழைப்புக்கு பிறகு விமானத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் பல முறை முயற்சி செய்தும், விமானத்துடன் தொடர்பு ஏற்படவில்லை என DGCA தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments