Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏர்-இந்தியா ஊழியர்களுக்கும் கொரோனா: வெளிநாட்டு இந்தியர்களை அழைத்து வருவதில் சிக்கலா?

ஏர்-இந்தியா ஊழியர்களுக்கும் கொரோனா: வெளிநாட்டு இந்தியர்களை அழைத்து வருவதில் சிக்கலா?
, ஞாயிறு, 10 மே 2020 (19:09 IST)
கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் தாய்நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏர் இந்தியா ஊழியர்கள் 7 பேருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சற்று முன் வெளியான தகவலின்படி ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கும் அதன் பொறியியல் பிரிவைச் சேர்ந்த இரண்டு பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த சில நாட்களாகத்தான் வெளிநாட்டு இந்தியர்களை மீட்கும் பணியை ஏர் இந்தியா துவங்கியுள்ள நிலையில் திடீரென 5 பைலட்டுக்களுக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவுக்கும் கடந்த ஒரு மாதமாக இவர்கள் எந்த விமானத்தையும் இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் திடீரென 5 பைலட்டுக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இந்த ஐந்து விமானிகள் மற்றும் இரண்டு பொறியியல் பணியாளர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மட்டும் 509, தமிழகத்தில் 669: இன்றைய கொரோனா அப்டேட்