கொரோனா பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அயராது உழைக்கும் மருத்துவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதே சமயம் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு அறிவித்த இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 உடன் முடிவடையும் நிலையில், மூன்றாம் கட்டமாக இரண்டு வாரங்களுக்கு மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் மே 3 அன்று மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரையிலும், குஜராத் முதல் அசாம் வரையிலும் இந்திய விமானப்படை விமானங்கள் பறந்து செல்லும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் தன்னலம் பாராது பணி புரியும் மருத்துவர்களை கௌரவிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.