20 பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரி: சீனாவிற்கு எதிராக இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
எய்ம்ஸ் மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை: டெல்லியில் பரபரப்பு
டெல்லியில் இயங்கிவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாமாண்டு மருத்துவம் படித்து வரும் 22 வயது மாணவர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பெங்களூரைச் சேர்ந்த 22 வயது விகாஷ் என்ற மாணவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். இரண்டாம் ஆண்டு மருத்துவ படித்து வந்த அவர் மன நலம் சரியில்லாததால் கடந்த சில நாட்களாக மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் திடீரென நேற்று ஹாஸ்டல் மாடியிலிருந்து குதித்தார். இதனால் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து மருத்துவர்கள் சிகிச்சை செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரம் முன்பு வரை அவர் யூடியூபில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் யூடியூபில் ஏதாவது வீடியோவை அப்லோட் செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்