குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களை பாதுகாக்கவும் காவல் துறை பல விதமான புதிய முயற்சிகளை எடுப்பது வழக்கம். ஆனால் அஹமதாபாத் ரயில்வே பாதுகாப்பு போலீஸ் எடுத்திருக்கும் முயற்சி ஹாலிவுட் பட லெவலுக்கு இருக்கிறது.
செக்வே எனப்படும் இருசக்கரங்கள் மட்டும் உள்ள ஒரு வண்டியை வாங்க இருக்கிறார்கள் அகமதபாத் ஆர்பிஎஃப் அதிகாரிகள். நின்று கொண்டு பயணம் செய்யும் இரண்டு சக்கரங்களுடைய செக்வே ஆனது பல வகைகளில் உள்ளன. சில குழந்தைகள் இதுபோன்ற சாதனங்களில் செல்வதை கூட நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இவர்கள் வாங்க போவது அதிவேகமாக செல்லக்கூடிய உயர் தொழில்நுட்பம் கொண்ட செக்வே.
இது ஒரு மணி நேரத்திற்கு 8 முதல் 10 கி.மீ வேகம் செல்லக்கூடியது. ரயில்வே ப்ளாட்பாரங்களில் மக்களிடையே ஓட்டி செல்ல ஏதுவானது. போலீஸ் அதிகாரிகள் ஒரு ப்ளாட்பாரத்திலிருந்து மற்றொரு ப்ளாட்பாரத்திற்கு செல்வதற்கும், சுமார் 800 மீட்டர் நீளம் கொண்ட ப்ளாட்பாரங்களில் ரோந்து செல்வதற்கும் இது உதவியாக இருக்கும் என கூறுகிறார்கள். இதனால் அதிகமான உடல் இழைப்பும், நேரமும் மிச்சமாகும். மே 23 முதல் சோதனைக்காக சில செக்வேக்களை உபயோகித்து வருகிறார்கள். அது உபயோகமாய் இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு வாங்க இருக்கிறார்களாம். ஒரு செக்வேயின் விலை ரூபாய் 1 லட்சமாம்!