Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலவசமா உள்ளாடை தறேன்.. உங்க அந்த போட்டோவை அனுப்புங்க! – பெண்களை குறிவைக்கும் ஆபாச ஆசாமி!

Advertiesment
இலவசமா உள்ளாடை தறேன்.. உங்க அந்த போட்டோவை அனுப்புங்க! – பெண்களை குறிவைக்கும் ஆபாச ஆசாமி!
, ஞாயிறு, 17 ஜனவரி 2021 (10:46 IST)
இலவசமாக உள்ளாடைகள் வழங்குவதாக கூறி பெண்களின் ஆபாச புகைப்படங்களை கேட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இணையம் மூலமாக நடைபெறும் ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் ஆன்லைனில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அகமதாபாத்தை சேர்ந்த 18 வயது பெண் ஒருவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் தாங்கள் ‘இலவச உள்ளாடை திட்டம்’ மூலமாக பெண்ணுக்கு இலவச உள்ளாடைகள் வழங்க உள்ளதாகவும் அதற்காக பெண்ணின் விவரங்களையும் கேட்டுள்ளார்.

அவரும் கொடுக்க பின்னர் அடிக்கடி இளம்பெண்ணுக்கு போன் செய்து பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்ப சொல்லி அந்த நபர் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் சந்கேதா பகுதியை சேர்ந்த சூரஜ் என்ற நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் பல பெண்களிடம் இதுபோன்று அவர் ஆபாச புகைப்படங்களை கெட்டு தொல்லை கொடுத்ததும், ஆன்லைன் கடன் தருவதாக சொல்லி மேலும் சில மோசடிகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவை பாத்து பெண்ணுரிமை கத்துக்கோங்க! – திராவிட கட்சிகளை பங்கம் செய்த காயத்ரி ரகுராம்