அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து சென்ற காளை முட்டியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
	
	
	தமிழகத்தில் பொங்கலையொட்டி பல மாவட்டங்களில் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது வீரர்கள் பலியாவதும், படுகாயம் அடைவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நவமணி என்பவர் தனது நண்பரின் காளையை அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் நவமணி பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.