Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Diamond Mask: அலப்பரை கூட்டும் நகைக்கடைகள்!

Advertiesment
Diamond Studded mask
, வெள்ளி, 10 ஜூலை 2020 (17:04 IST)
சூரத்தில் உள்ள நகைக்கடையில் டைமண்ட் பதித்த மாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் அவசியமான ஒன்றாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  
 
இந்நிலையில் பூனேவில் ஷங்கர் குரேட் என்பவர் தங்கத்தில் மாஸ்க் செய்து அதனை அணிந்துக்கொண்டு வலம் வருகிறார். இந்த தங்க மாஸ்கின் மதிப்பு ரூ.2.90 லட்சம். இதனைத்தொடர்ந்து தற்போது சூரத்தில் உள்ள நகைக்கடையில் டைமண்ட் பதித்த மாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 
ஆம், சூரத்தில் உள்ள குஷால்பாய் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் நான்கு விதமான டிசைன்களில் இந்த மாஸ்க்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது மணமக்களுக்கான பிரத்யேக மாஸ்க் ஆக உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இதில் ஆண் , பெண் இருவருக்குமான மேட்சிங் ஜோடி மாஸ்குகளும் கிடைக்கின்றன. இந்த மாஸ்குகள் 1 லட்சத்தில் துவங்கி 4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை மரணம் தொடர்பாக பிரபல பாடகியின் வீடியோவை நம்ப வேண்டாம் - சிபிசிஐடி