Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலவர பூமியாக மாறிய அரியானா, பஞ்சாப்; தீவிர ஆலோசனையில் ராஜ்நாத் சிங்

Advertiesment
கலவர பூமியாக மாறிய அரியானா, பஞ்சாப்; தீவிர ஆலோசனையில் ராஜ்நாத் சிங்
, வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (19:19 IST)
குர்மீத் ராம் ரஹிம் சிங் பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


 
நன்றி: ANI

தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீத் சிங் பாலியல் பலாத்காரம் வழக்கில் இன்று அவர் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு வழங்கவுள்ள தண்டனை குறித்து வரும் 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த கலவரம் டெல்லி மாநில எல்லைப்பகுதி வரை பரவியுள்ளது.
 
பஞ்ச்குலாவில் குர்மீத் ஆதரவாளர்கள் வாகனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுப்பாட்டில் கொண்டு வர பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியதில் பதற்றம் அதிகரித்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அரியானாவில் இரண்டு ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்குகளுக்கு தீவைக்கப்பட்டது. கலவரத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரியானா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார் உதவி அளிப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மணி நேரத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும்; டிராபிக் ராமசாமி சாகும் வரை உண்னாவிரதம் போராட்டம்