பீகார் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது என்பதும் மீண்டும் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி அங்கு அமைய வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் பீகார் மாநில சட்டசபை தேர்தலுடன் ஒரு சில மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த 28 கிடைத்து 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த 7 சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் நடந்த இரண்டு சட்டசபை இடைத்தேர்தலில் இரண்டிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா ஊரடங்கு, ஜிடிபி குறைவு உள்பட பல குறைகள் பாஜக ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கே பெருவாரியான வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது