Publish Date: Tue, 09 Jan 2018 (13:04 IST)
Updated Date: Tue, 09 Jan 2018 (13:07 IST)
புதுச்சேரியில் இலவசம் வழங்கப்படாததை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது இலவச பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். நிதி நெருக்கடி காரணமாக ஆளுநர் கிரண் பேடி தீபாவளிக்கு இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.
தற்போது பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களும் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இலவச பொருட்கள் வழங்கப்படாததைக் கண்டித்து எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கள் இலவச பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் உத்தரவு அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.