Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரியனுக்கு போகும் வழியில் செல்பி எடுத்த ஆதித்யா எல்-1 ! – வைரலாகும் போட்டோ!

Aditya L1
, வியாழன், 7 செப்டம்பர் 2023 (11:43 IST)
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் தன்னை தானே செல்பி எடுத்துக் கொண்டுள்ளது.



இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) சந்திரயான், மங்கள்யான் திட்டங்கள் மூலம் நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் கால் பதித்து உலக அரங்கில் பெரும் சாதனையை படைத்துள்ளது. அதை தொடர்ந்து அடுத்த கட்டமாக சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆதித்யா திட்டத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி சூரியன் குறித்த ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2ம் தேதியன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசைக்கும், சூரியனின் ஈர்ப்பு விசைக்கும் இடையேயான லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்ற பகுதியில் நிலையாக நின்று தனது ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

தற்போது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுவட்டபாதை தூரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னை தானே எடுத்த செல்பி புகைப்படத்தை ஆதித்யா எல்-1 அனுப்பியுள்ளது. இது விண்கலம் எந்த வித பாதிப்பும் இன்றி சென்றுக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் தொலைவிலிருந்து பூமியையும், நிலவையும் போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது ஆதித்யா எல்-1. இந்த புகைப்படங்கள் தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ள நிலையில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!