இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் தற்போது இரண்டாவது புவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக பயணம் செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் சூரியனை நோக்கி பயணித்து வருகிறது. சூரிய துகள்கள், சூரிய வெப்பம் குறித்து ஆய்வு செய்யும் இந்த வெண்கலம் முதலாவது புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக பயணத்தை முடித்துவிட்டு தற்போது இரண்டாவது புவி சுற்றுவட்ட பாதைக்கு மாறி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
மேலும் செப்டம்பர் 10ஆம் தேதி மூன்றாவது புவி சுற்றுவட்ட பாதைக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் மாறும் என்றும் திட்டமிட்டபடி ஆதித்யா எல்-1 தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
சந்திராயன் 3 போலவே ஆதித்யா எல்-1 விண்கலமும் தனது இலக்கை வெற்றிகரமாக அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.