சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது.
இதுபற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: ''ஆதித்யா எல் 1 விண்கலம் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் தமிழகத்தைச் சேர்ந்தவர்'' என்று தெரிவித்தார்.
திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி கூறியதாவது: ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது'' வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி லெக்ராஞ்சி புள்ளி 1 ஐ ஆதித்யா எல் 1 விண்கலம் சென்றடையும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டத்தில் பங்களிப்பு செய்து, திட்டம் வெற்றியடைய காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.