Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘ஆதித்யா எல் 1' கவுண்டவுன் தொடங்கியது...

Advertiesment
AdityaL1
, வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (12:48 IST)
இஸ்ரோ  நிறுவனத்தின்  ‘ஆதித்யா எல் 1' விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கியது.

விண்வெளியில் இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல புதிய ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறது, சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக  நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தன.

இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1  என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ‘ஆதித்யா எல் 1 விண்கலத்தை’ சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 57 என்ற ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான 24 மணி  நேர கவுண்டவுன் இன்று தொடங்கியது.

அதன்படி  நாளைய தினம் காலை 11.50க்கு ‘ஆதித்யா எல் 1 ‘ விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் நேரத்தில் எனது பணிகளை முடக்க வீண்பழி.. விஜயலட்சுமி விவகாரம் குறித்து சீமான்..!