Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர் விடுமுறை எதிரொலி.! தனியார் பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு.! அதிர்ச்சியில் பயணிகள்.!!

omni buss

Senthil Velan

, வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (13:26 IST)
தொடர் விடுமுறை எதிரொலியாக, தனியார் ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
சனி, ஞாயிறு, வரும் 17-ம் தேதி மிலாடி நபி என தொடர் விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் வருவதால் சென்னையில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
 
இதன் காரணமாக, அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் சொகுசாக செல்வதற்கு திட்டமிட்டு, புக்கிங் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக ஆம்னி பேருந்துகள் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
 
அதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. சுமார் ரூ.4500 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

 
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பயணிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் விவகாரம்.! பாஜகவினரின் செயலுக்காக அண்ணாமலை மன்னிப்பு.!!