Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Advertiesment
Odissa Train accident
, ஞாயிறு, 4 ஜூன் 2023 (13:44 IST)
ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 300 என ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மீட்பு பணிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் உடல்களின் எண்ணிக்கையை வைத்து இந்த கணக்கு வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் ஒரு சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் தான் 288 என்று கூறப்பட்டதாகவும் ஆனால் உயிரிழப்பு 288 அல்ல 275 என ஓடிஷா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
 
உயிரிழந்த உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டதை அடுத்து ரயில் பாதைகள் தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிகப்பெரிய ரயில் விபத்து.. 15 மணி நேரத்தில் முடிந்த மீட்புப்பணிகள்: வல்லரசு நாடுகள் ஆச்சரியம்..!