Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதானி, அம்பானியால் ராகுல் காந்தியை வாங்க முடியாது- பிரியங்கா காந்தி

Advertiesment
rahul priyanka
, செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:54 IST)
நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களாக அதானி, அம்பானியால் ராகுல் காந்தியை வாங்க முடியவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,  வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி, சமீபத்தில், ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, ஆந்திரா, தெலுங்கானா  உள்ளிட்ட  மா நிலங்களில் பயணித்து தற்போது டெல்லியில் யாத்திரையை   மார்கத் அனுமன் கோயிலில் ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில்,  இன்று டெல்லியில் யாத்திரையை முடித்து அவர்  உத்தரபிரதேசத்திற்குள்  நுழைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் உ.,பி  மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவரை வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா காந்தி, ‘’அதானி, அம்பானியால் ராகுல் காந்தியை வாங்க முடியவில்லை. இனியும் அவர்களாள் ராகுலை வாங்க முடியாது; ராகுல் எப்போது உண்மை என்ற கவசத்தை அணிருப்பதால், குளிர் அவரை எதுவும் செய்வதில்லை’’ என்று தெரிவித்தார்.

 
சமீபத்தில் ராகுல்காந்தியின்  ஒற்றுமைப் பயணத்தில் கமல் தன் கட்சியினருடன் கலந்து கொண்டு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் பண்டிகையை ஒட்டி10,749 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்