Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வேட்பாளராக போட்டியிடும் அஜித் பட நடிகர்

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (08:24 IST)
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் பல கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. நேற்று காங்கிரஸ் கட்சியின் 20 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியான நிலையில் சற்றுமுன் பாஜகவின் 3 வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது
 
இதன்படி கேரள மாநிலம் திருச்சூரில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி போட்டியிடவுள்ளார். இவர் அஜித் நடித்த 'தீனா', ஷங்கர் இயக்கிய 'ஐ' உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
மேலும் இந்த வேட்பாளர் பட்டியலில் குஜராத் மாநிலத்தின்  மஹசேனா தொகுதியில் ஷ்ரதா பென் பட்டேல் போட்டியிடவுள்ளதாகவும், சூரத் தொகுதியில் தர்ஷனா ஜர்தோஷ் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த மூவருடன் சேர்ந்து மொத்தம் இதுவரை 377 பாஜக வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அன்புமணிக்கு நான் என்ன குறை வெச்சேன்! - கலங்கி பேசிய ராமதாஸ்!

அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை.. டிரம்புக்கு செக் வைத்த மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments