Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சன்னியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளம்பெண்! வீடியோவை பாருங்க!

Advertiesment
Actor Sunny Deol
, வெள்ளி, 10 மே 2019 (13:18 IST)
பஞ்சாப்பில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளரும், நடிகருமான சன்னி தியோலினை இளம் பெண் ஒருவர் ஓடிவந்து கட்டியணைத்து முத்தம் கொடுத்தது ஒரு நிமிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
பிரபல நடிகரும், பாஜகவின் நட்சத்திர வேட்பாளருமான சன்னி தியோல், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வரும் 12 -ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
 
இதற்காக டெல்லியின் ஹரிநகர்,  சுபாஷ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  திறந்த வாகனத்தில் பயணித்தபடி, பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். மேற்கு டெல்லி பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவும் சன்னிடியோலுடன் பயணித்து வாக்குகளை சேகரித்தார்.
 
அப்போது சாலையில் திரண்டிருந்த கூட்டத்தில் இருந்து  திடீரென இளம்பெண் ஒருவர் சன்னி தியோலின் காரை நோக்கி ஓடிவந்து காரின்மீது ஏறி சன்னி தியோலினை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
பொது  இடத்தில் ஒரு இளம்பெண் ஒருவர் வேட்பாளருக்கு முத்தம் கொடுத்த நிகழ்வு அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு இந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருவேப்பிலங்குறிச்சி மாணவி கொலை – விருத்தாசலத்தில் சாலை மறியல் !