சல்மான்கான் தண்டனை விபரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (14:47 IST)
சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் சிலர் கடந்த 1998ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அரிய வகை கருப்பு நிற மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அதுகுறித்து தொடரப்பட்ட  வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என்றும், அவருடன் சென்ற மற்றவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்தார். இருப்பினும் சல்மான்கானின் தண்டனை விபரம் அப்போது குறிப்பிடப்படவில்லை

இந்த நிலையில் சற்றுமுன் சல்மான்கானின் தண்டனை விபரங்களை நீதிபதி தெரிவித்துள்ளார். இதன்படி சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான்கான் தரப்பினர் மேல்முறையீடு செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments