Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலையாள நடிகை வழக்கில் நடிகர் திலீப் கைது - வெளியான திடுக் தகவல்கள்

Advertiesment
மலையாள நடிகை வழக்கில் நடிகர் திலீப் கைது - வெளியான திடுக் தகவல்கள்
, செவ்வாய், 11 ஜூலை 2017 (09:34 IST)
கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உடபடுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
கடந்த பிப்ரவரி மாதம் மலையாள நடிகையை சிலர் காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்தனர். அது தொடர்பாக பல்சர் சுனில் என்பவர் உட்பட சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் அவரிடமும், அவரது மேலாளர் அப்புண்ணி மற்றும் இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடமும் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். 
 
மேலும்,நடிகையை காரில் கடத்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தி வரும் ஆடை நிறுனத்தில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனில் கடிதத்தில் தெரிவித்ததை அடுத்து, காவ்யா மாதவனின் கடையில் போலீசார் கடந்த 1ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அதில் அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. 

webdunia

 

 
மேலும், திலீப் மற்றும் காவ்யா மாதவனுக்கு எதிராக பல முக்கிய வலுவான ஆதரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதால் அவர்கள் இருவரும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், நடிகை திருமணத்தை நிறுத்தவே அந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக மேலும் பல முக்கிய தகவல்கள் போலீசார் வட்டாரத்திலிருந்து வெளியே கசிந்துள்ளது.
 
அதாவது, நடிகர் திலீப், நடிகை மஞ்சு வாரியர், பாதிக்கப்பட்ட நடிகை, காவ்யா மாதவன் ஆகியோர் நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர். மேலும், திலீப், மஞ்சு வாரியர் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை ஆகியோர் ஒன்றாக இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். அந்நிலையில்தான் மஞ்சு வாரியரை திலீப் திருமணம் செய்து கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் மஞ்சு வாரியர், காவ்யா மாதவன் ஆகியோரின் பேரில் திலீப் ஏராளமன நிலங்களை வாங்கி குவித்துள்ளார்.
 
அந்நிலையில்தான் காவ்யா மாதவன் மீதி திலீப்பிற்கு காதல் ஏற்பட்டது. இதை மஞ்சு வாரியரிடம் பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார். அதனால், மஞ்சு வாரியர், திலீப் தம்பதியினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதற்கிடையில், காவ்யா மாதவன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திலிப்பிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, அவரிடமிருந்து மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்றுவிட்டார். மேலும், திலீப், காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். 
 
தன்னுடைய காதல் விவகாரத்தை மனைவியிடம் அம்பலப்படுத்திய நடிகை மீது திலீப் ஏற்கனவே கோபத்தில் இருந்துள்ளார். எனவே, நடிகை பேரில் வாங்கிய சொத்துக்களை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு பாதிக்கப்பட்ட நடிகையிடம் அவர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
 
இதனால் ஆத்திரம் அடைந்த திலீப், பல்சர் சுனிலை பயன்படுத்தி அவர் காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. அவரை அலங்கோலமாக வீடியோ எடுத்து, அதை  காதலர் நவீனுக்கு அனுப்பி எப்படியாவது அவர்களின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து, திலீப்பை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரீஸ் நகரில் வரலாறு காணாத வெள்ளம். ஒரே இரவில் 54மிமீ மழை