பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாள் இரவில் கொட்டி தீர்ந்ததால் அந்நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாகவும், நகரின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டதால் பாரீஸ் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
பாரீஸ் நகரில் நேற்று முன் தினம் புயல் தாக்கியதை அடுத்து இரவில் விடிய விடிய கனமழை பெய்தது. ஒரே நாள் இரவில் 54 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் பாரீஸ் நகரில் கடந்த 1995-ம் ஆண்டு 47.4 மி.மீ அளவுக்கு மழை பெய்ததே அதிகபட்ச மழையாக் இருந்தது.
இருப்பினும் பிரான்ஸ் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை காரணமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்புப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த உதவி தேவையென்றாலும் அரசு கொடுத்துள்ள ஹெல்ப்லைன் எண்களுக்கு தகவல் கொடுத்தால் மீட்புப்படையினர் உடனே வந்து உதவுவார்கள் என்றும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.