Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் கால்பதிக்க ஆம் ஆத்மி முயற்சி! – ட்வெண்டி ட்வெண்டியுடன் பேச்சுவார்த்தை!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (13:16 IST)
பஞ்சாபில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்து கேரளாவை குறி வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறிய கட்சியாக தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி முன்னதாக நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து டெல்லியில் ஆட்சியில் இருந்து வரும் ஆம் ஆத்மி சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாபில் போட்டியிட்டு பெரும்பான்மை வெற்றியை பெற்றது.

டெல்லியை தாண்டி ஆம் ஆத்மிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். இந்நிலையில் கோவாவிலும் கட்சியை விரிவுப்படுத்துவதில் ஆம் ஆத்மி மும்முரம் காட்டி வருகிறது. மேலும் கேரளாவிலும் கட்சியை வளர்க்க ஆம் ஆத்மி முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே எப்போதும் பெரும்பான்மை வகித்து வருகின்றன. இதற்கிடையே எர்ணாகுளத்தை மையமாக கொண்டு புதிதாக தொடங்கப்பட்ட ட்வெண்டி ட்வெண்டி என்ற கட்சியானது கவனிக்கத்தக்க அளவு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதுடன் வளர்ந்து வரும் கட்சியாகவும் உள்ளது.

இந்நிலையில் எர்ணாக்குளத்தில் 15 தேதி ட்வெண்டி ட்வெண்டி கட்சி நடத்தும் மாநாட்டில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த கெஜ்ரிவால் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பின் கேரளாவில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து செயல்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments