Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி, பஞ்சாப் மட்டுமல்ல, ஹரியானாவிலும் தனித்து போட்டி: கெஜ்ரிவால் அதிரடி முடிவு..!

Siva
திங்கள், 29 ஜனவரி 2024 (07:03 IST)
ஹரியானாவில் ஆம் ஆத்மி தனித்து போட்டி என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளதால் இந்தியா கூட்டணிக்கு புது சிக்கல் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி நேற்றைய கூட்டத்தில் கெஜ்ரிவால்  காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார்,.
 
ஹரியானாவில் உள்ள 10 பாராளுமன்ற தொகுதிகளிலும்  ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியா கூட்டணிக்கு புதிய சவால் எழுந்த்துள்ளது.
 
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியானாவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "ஹரியானாவில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், ஆம் ஆத்மி கட்சி மட்டுமே அந்த மாற்றத்தை கொண்டு வர முடியும்" என்று அவர் கூறினார்.
 
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஹரியானாவில் வலுவாக இருக்கும் நிலையில் இந்தக் கூட்டணி இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவு இந்தக் கூட்டணிக்குப் பெரும் பின்னடைவாகும்.
 
ஆம் ஆத்மி கட்சி டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி என அறிவித்துள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர். அதேபோல் ஹரியானாவிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டால் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
ஆம் ஆத்மி கட்சியின் தனித்துப் போட்டியிடும் முடிவு காங்கிரஸுக்கும் சவாலாக அமைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தனித்துப் போட்டியிடும் முடிவு ஹரியானா அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments