Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: முதல்வர் அறிவிப்பு

punjab cm

Sinoj

, புதன், 24 ஜனவரி 2024 (17:34 IST)
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜகவை வீழ்த்த வேண்டி, இந்தியா முழுவதும் உள்ள  முக்கிய எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

இதில், இந்திய தேசிய காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஜனதா தளம், சிவசேனா,( உத்தவ் தாக்கரே அணி), இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்). தேசியவாத காங்கிரஸ்,  இந்தியன் முஸ்லிம் லீக், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு,  இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, கேரளா காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட  27  உறுப்பின கட்சிகள் இணைந்துள்ளனர்.

சமீபத்தில்,  இந்தியா கூட்டணி சார்பில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த  நிலையில், கூட்டணி, தொகுதி பற்றி பேச்சுவார்த்தைகள் ஒவ்வொரு  மா நிலத்திலும் நடந்து வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மா நிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளதாவது:

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மா நிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்ய ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? - 74 பேரின் கதி என்ன?