Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி: 50 இடங்களுக்கும் மேல் முன்னிலை!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (08:45 IST)
ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி
பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே 25 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி அக்கட்சிக்கு 50 இடங்களுக்கு மேல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தற்போது 52 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வருவதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் போட்டியிட்ட தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருவதாகவும் முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன
 
தேர்தல் கருத்துக்கணிப்பின் படி தற்போதைய நிலவரப்படி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் பின்னடைவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் கிடைத்த தகவலின்படி பாஜக 16 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

அடுத்த கட்டுரையில்
Show comments