Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எலும்புக்கூடுகளை கடத்திய வாலிபர்கள் கைது : திகைக்க வைக்கும் வாக்குமூலம்

Advertiesment
எலும்புக்கூடுகளை கடத்திய வாலிபர்கள் கைது :  திகைக்க வைக்கும் வாக்குமூலம்
, புதன், 28 நவம்பர் 2018 (15:55 IST)
விமானத்தில் தங்கம் வெள்ளி கடத்திக்கொண்டு செல்லும் மாபியாக்கள் மலிந்துவிட்ட இந்தக் காலத்தில் போலீஸாரிடம் அவ்ரகள் பிடிபடும் போதுதான் உண்மை என்னவென்று உலகத்துக்கு தெரியவருகிறது. சிலர் பணத்துக்காக திருடுகின்றனர். சிலர் வயிற்று பிழைப்புக்கு திருடுகின்றனர். சிலர் அதை பிழைப்பாகக் கொண்டு தன் வாழ்க்கை வீணடித்து குற்றவாளிகளாக ஜெயிலில் காலம் கழிக்கின்றனர்..
அதுபோல் ஒரு சம்பவம் தற்போது பீஹாரில் நடந்துள்ளது. அதாவது இந்த நபர் கடத்தியுள்ளது பணமோ , தங்கமோ அல்ல மாறாக எலும்புக்கூடுகள் ஆகும் . போதை  மருத்துகள் பரவலாக விற்பனை செய்யப்படும் இடமாக வட மாநிலம் இருப்பதால் ரயில் நிலையங்களில் பலகட்ட சோதனைகள் நடைபெறுவது வழக்கம்.
 
இந்நிலையில் மூன்று வாலிபர்கள் எலும்புக்கூடுகளை ஒரு துணிக்குள் வைத்து மூட்டையாகக் கட்டி வெளியே தெரியாமல் கொண்டு சென்றனர்.
 
இவர்களை சந்தேகித்த போலீஸ் இவர்களின் மூட்டைகளை சோதனை செய்தனர். அபோதுதான் இவர்கள் கட்டிக் கொண்டு சென்றது எலும்புக்கூடுகள் என்று தெரிந்தது.
 
இதுபற்றி போலீஸார் அவரகளிடம் விசாரித்த போது, இம்மூட்டையை உத்தரபிரதேசத்திலிருந்து கொண்டு வருவதாக கூறினர்.
 
மேலும் போலிஸார் தீவிரமாக விசாரித்த போது இந்த எலும்புக்கூடுகளை பூஜைக்காக கொண்உ செல்வதாக கூறியுள்ளார்கள். இவர்களை கைது செய்த போலீஸார் வேறூ யாருடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர்கள் படையுடன் டெல்டாவில் களமிறங்கிய எடப்பாடியார்!! அனல்பறக்கும் மீட்புப்பணிகள்