Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லை - விரக்தியில் பெண் போலீஸ் அதிகாரி தற்கொலை

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (17:56 IST)
உத்திரபிரதேசத்தில் உயரதிகாரியின் பாலியல் தொல்லையால் விரக்தியில் பெண் போலீஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதால் பெருமளவு சிரமப்படுகிறார்கள்.
 
உத்திரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி காவல் நிலையத்தில் அர்ச்சனா என்ற பெண் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அர்ச்சனாவிற்கு உயரதிகாரி ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அர்ச்சனா, கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் அர்ச்சனாவிற்கு பாலியல் தொல்லை அளித்த அதிகாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. இனியும் தாமதம் கூடாது: அன்புமணி

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்