வறுமையிலும் கடுமையாக உழைத்து தன்னை போலீஸ் ஆக்கிய தனது தாயின் காலில் விழுந்து மகன் ஆசி பெற்ற புகைப்படம் பலரையும் உருக வைத்துள்ளது.
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், எத்தனை பேர் தாயை மதித்து நடக்கிறார் என்பது தெரியவில்லை. இந்நிலையில், தன்னை உருவாக்கிய தாயின் காலில் விழுந்து ஆசி பெற்ற மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை இந்த பெண்மணி கணவரை இழந்தவர். வறுமையிலும் கஷ்டப்பட்டு உழைத்து தன் மகனை படிக்க வைத்தவர். காவல் அதிகாரி ஆக விருப்பப்பட்ட அவரது மகன், அதற்கான தேர்வுகளில் கலந்து கொண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். வயலில் வேலையில் இருந்ததால், அவர் பதவியேற்பு விழாவில் கூட அந்த தாய் கலந்து கொள்ளவில்லை.
எனவே, வேலைக்கான ஆர்டரை கையில் வைத்துக்கொண்டு, தனது தாயை பார்க்க ஓடி வந்த அந்த மகன், கொளுத்தும் வெயிலில் வேலை செய்து கொண்டிருந்த தனது தாயை நோக்கி ஓடி வந்து காலில் விழுந்து சரண கதி அடைந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் அதை புகைப்படமாக எடுக்க, ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதை பகிரிந்து, அந்த வாலிபரை பாராட்டியுள்ளார். தற்போது அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.