Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

Advertiesment
Flight

Prasanth Karthick

, சனி, 10 மே 2025 (08:19 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக 32 விமான நிலையங்கள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் பதிலடி தாக்குதலான ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையோர பகுதிகளான பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் இந்திய ராணுவம் சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த ட்ரோன்களை வானத்திலேயே அடித்து வீழ்த்தி வருகிறது.

 

இந்த வான்வெளி தாக்குதல் முயற்சி காரணமாக அசாதாரண சூழல் நிலவுவதால் 32 விமான நிலையங்கள் மே 14 வரை மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள விமான நிலையங்கள் பட்டியல்:

 

1 ஆதம்பூர்

2 அம்பாலா

3 அமிர்தசரஸ்

4 அவந்திபூர்

5 பதிண்டா

6 புஜ்

7 பிகானர்

8 சண்டிகர்

9 ஹல்வாரா

10 ஹிண்டன்

11 ஜெய்சால்மர்

12 ஜம்மு

13 ஜாம்நகர்

14 ஜோத்பூர்

15 காண்ட்லா

16 காங்க்ரா (கக்கல்)

17 கேஷோத்

18 கிஷன்கர்

19 குலு மணாலி (பூந்தர்)

20 லே

21 லூதியானா

22 முந்த்ரா

23 நலியா

24 பதான்கோட்

25 பாட்டியாலா

26 போர்பந்தர்

27 ராஜ்கோட் (ஹிராசர்)

28 சர்சாவா

29 சிம்லா

30 ஸ்ரீநகர்

31 தோயிஸ்

32 உத்தரலை

 

இந்த இடைப்பட்ட காலத்தில் விமான சேவை நிறுத்தப்படும் நிலையில் இதுகுறித்து இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் பயணிகளுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!