Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐயா.. யாராவது காப்பாத்துங்க..! – கோவில் ஜன்னலில் சிக்கிய திருடனின் கதறல்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (11:43 IST)
ஆந்திராவில் கோவிலில் கொள்ளையடிக்க சென்ற திருடன் ஜன்னலில் சிக்கிக் கொண்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ளது எல்லையம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சமீபத்தில்தான் திருவிழா நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த கோவிலுக்குள் கொள்ளையடிக்க திருடன் ஒருவன் புகுந்துள்ளான்.

ஜன்னல் கம்பிகளை நீக்கி உள்ளே புகுந்த திருடன் அம்மனின் தங்க நகைகள், உண்டியல் பணம் என எல்லாவற்றையும் மூட்டையாக கட்டிக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியேற முயன்றுள்ளான். ஜன்னலில் பாதி உடலை நுழைத்த நிலையில் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட திருடன் தொடர் முயற்சிகளால் சோர்ந்து அப்படியே தூங்கியுள்ளான்.

காலை கோவிலுக்கு வந்த மக்கள் ஜன்னலில் திருடன் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடம் காப்பாற்றுமாறு திருடன் கெஞ்சவே ஜன்னலிலிருந்து வெளியே எடுக்க முயன்றுள்ளனர். இதற்கிடையே போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜன்னலில் சிக்கிய திருடனை மீட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments